×

அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்


அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று சாமி தரிசனம் செய்தார். அயோத்தி ராமர் கோயில் ஜன.22ம் தேதி திறக்கப்பட்டது. இதை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு விழாவில் கலந்து ெகாள்ள அழைப்பு விடுக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்வு அயோத்தி சென்றார். விமானநிலையத்தில் அவரை கவர்னர் ஆனந்திபென் பட்டேல் வரவேற்றார்.

அதன்பின் அயோத்தி அனுமன் கோயிலுக்கு சென்று முதலில் வழிபட்ட அவர், அதை தொடர்ந்து ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார். முன்னதாக சரயு நதியில் நடந்த ஆரத்தி வழிபாடு நிகழ்ச்சியிலும் முர்மு கலந்து கொண்டார்.

The post அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : President Darshan ,Ayodhya Temple ,Ayodhya ,President ,Drabupati Murmu ,Sami ,Ram temple ,Ayodhya Ram Temple ,Modi ,Dravupati Murmu ,
× RELATED அயோத்தியில் பிரதமர் மோடி பிரசாரம்